இராணுவ சிப்பாய் ஒருவர் தனது மனைவியையும் உறவினர்களையும் கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளார்.
இச் சம்பவம் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
மனைவியைப் பிரிந்து வாழும் இந்த இராணுவ சிப்பாய் தற்கொலை செய்வதற்கு முன்னர் மனைவி வசிக்கும் வீட்டிற்குச் சென்று அவரையும் அவரது தாயாரையும் உறவுக்கார இளைஞன் ஒருவரையும் கத்தியால் குத்திவிட்டு அவ்விடத்திலேயே குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் உபுல நில்மினி ஆரியரட்ன தெரிவித்தார்.
இராணுவ வீரரிடம் ஜீவனாம்சம் கோரி அவரது மனைவி வழக்குத் தாக்கல் செய்திருந்தாரென்றும், வழக்குத் தவணைக்கு சிப்பாய் வராததாலேயே மனைவிக்கும் சிப்பாய்க்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனையடுத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த மூவரும் பலப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.