Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ விரும்புவதில்லை
[29 - April - 2008] [Font Size - A - A - A]
*காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா அறிக்கை

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மிக நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரு இனங்களினதும் வாழ்க்கை அமைப்பு ஓர் இனத்தை விட்டு மற்றைய இனம் பிரிந்துபோக முடியாதவாறு அமைந்திருக்கிறது. தமிழ்ப் பிரதேசங்களும் முஸ்லிம் பிரதேசங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. தமிழ் மக்கள் முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம் மக்கள் தமிழ் பிரதேசங்களிலும் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் கணிசமான அளவு கடமை புரிகின்றனர். அரச அலுவலங்களிலும் இதேநிலை தான் காணமுடிகிறது.

இவ்வாறான வாழ்க்கை அமைப்பு இம் மாகாணத்தில் முஸ்லிம்களையும் தமிழர்களையும் பின்னிப் பிணைத்திருக்கின்றது. இந்நிலையில் இம் மாகாணத்திலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ ஒருபோதும் விரும்புவதில்லை என காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

துரதிர்ஷ்டவசமாக சில சந்தர்ப்பங்களில் விரிசல்கள், பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும் கூட அவை இரு சமூகத்தாரையும் சார்ந்த முக்கியஸ்தர்களது முயற்சியால் சீர்செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது இரு சமூகத்தாரும் மிகுந்த இணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது. இத் தேர்தல் முஸ்லிம்களும் தமிழர்களும் தனித்தனியாப் பிரிந்து நின்று பிளவுபட்டு முட்டி மோதிக்கொள்கின்ற ஒரு தேர்தலல்ல. மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டிக் காக்கப்பட்டு வருகின்ற தமிழ்- முஸ்லிம் நல்லுறவிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடியதாக இத்தேர்தல் அமைந்து விடக்கூடாது.

இத் தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் போட்டியிடுகின்றனர். இவர்களில் தெரிவுசெய்யப்படுவோர் மாகாணசபையை நிர்வகிக்கப்போகின்றனர். இரு சமூகத்தாரும் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களித்து தத்தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யப்போகின்றனர். தெரிவுசெய்யப்படுபவர்களில் முஸ்லிம்களும் இருப்பர். தமிழர்களும் இருப்பர். எல்லோரும் இணைந்துதான் கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க வேண்டும்.

எனவே, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை உறுதியாகப் பேணப்பட வேண்டும். தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்கள் இதற்கேற்ப செயற்பட வேண்டும். ஒவ்வொரு சமூகத்திலும் சிவில் சமூக அமைப்புக்கள் இருக்கின்றன. சமய, சமூக நிறுவனங்கள் உள்ளன. இவையும் மிகவும் அவதானமாக இருந்து இரு சமூகங்களுக்கிடையில் எவ்வித பிணக்குகளும் ஏற்பட்டு விடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

மிகவும் சிரமப்பட்டுக் கட்டிக் காக்கப்பட்டு வரும் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தற்காலிக நிகழ்வான தேர்தல் மூலம் குலைந்துவிடக் கூடாது. அவ்வாறு குலைந்துபோகாமல் பாதுகாப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமென்ற வகையில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் தமிழ்- முஸ்லிம் நல்லுறவைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அவதானம் செலுத்துகின்றது. இதன் காரணமாகவே இந்த முக்கியமான அறிக்கையை விடுக்கின்றது. எனவே, இதில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அனுசரித்து நடக்குமாறு காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறது.

Email this page Your Opinion Print this page
நீரில் மூழ்கியது இரத்தினபுரி ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு
மலையகத்தின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்துக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு
பகவதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்'
முன்னைய நிலைப்பாட்டினை வாபஸ் பெற்றார் பகவதி
இரணைமடுவில் விமானத் தாக்குதல்
ரணில் இன்று கிண்ணியாவில் பிரசாரம்
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
தற்கொலை குண்டுதாரிக்கு உதவியதாக கைதான பெண் சி.ஐ.டி. விசாரணைக்குட்பட்டவேளையில் மரணம்
கல்கமுவ பஸ் நிலையத்தில் சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டு
வடமாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு போராட்டம்
தென்பகுதியில் கடும் கடற்கொந்தளிப்பு பெருமளவு இழுவைப்படகுகள் நாசம்
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சிறுவர்களை அனுப்பிய மூவர் கைது
கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 2 1/2 கோடி ரூபா பொருட்கள் தடுத்து வைப்பு
கொக்குவிலில் காணாமற்போன இளம் தாயின் சடலம் பாழடைந்த வீடொன்றில் கண்டுபிடிப்பு
கிழக்கில் ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக அரசு பல்வேறு விதங்களிலும் அடாவடித்தனங்கள்
பஸ்குண்டு வெடிப்புகளையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இரு நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மடு அன்னையின் திருச்சொரூபம் தேவாலயத்திற்கு வரும்
அரிசி ஆலைகளை சோதனையிட்ட குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது
கிளைமோர் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு
வெள்ளம், மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா உதவி
அலுவலகங்களில் சிறந்த முகாமைத்துவத்தை கொண்டிருந்தால் மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்ற முடியும்
வடபகுதியை மீட்க யுத்தம் நடைபெறும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்
அமைச்சர் கருஜெயசூரியவின் கருத்துக்கு அரசதுறை ஊழியர் தொழிற்சங்கம் கண்டனம்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ விரும்புவதில்லை
க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு அடுத்த மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு
சிற்றுண்டிச்சாலை குடிநீரில் மனிதக் கழிவு நீர்
வவுனியா - கொழும்பு ரயில் சேவையை வவுனியா வரை நடத்துமாறு கோரிக்கை
வெளிநாடுகளுக்கு பொதி அனுப்பும் நிறுவனங்களில் அதிக கட்டணம் அறவீடு
24 பொதுமக்களை பலிகொண்ட குண்டுவெடிப்பு கண்டிக்கப்படவேண்டிய கொடூர வன்முறை
குண்டை வெடிக்க வைத்து இராணுவச் சிப்பாய் தற்கொலை
மாத்தளையில் திடீர் தேடுதல்; 15 பேர் கைது
பணிப்பாளர் ஆண் தாதியை ஏசியதால் மாத்தறை வைத்தியசாலையில் பகிஷ்கரிப்பு
மட்டக்களப்பில் 136 இடங்களில் தபால்மூல வாக்களிப்பு
கொழுந்து கொள்முதல் செய்யக் கொண்டு சென்ற 2 1/2 இலட்சம் ரூபா துப்பாக்கி முனையில் கொள்ளை
தபால் மூல வாக்களிப்பில் வாக்காளர்கள் உற்சாகம்
புதிய வகை காய்ச்சலினால் மாத்தளையில் இருவர் மரணம்
எத்தகைய இடர்வரினும் விடுதலைக்கனலை நெஞ்சில் சுமந்து சுதந்திர தாயகத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்
கொட்டாஞ்சேனையில் அத்துமீறி தேடுதல் மேலக மக்கள் முன்னணி கண்டனம்
வோல்றீம் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை தீயில் எரிந்து நாசம்; பெருமளவிலான சேதம்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல துணைபுரிந்தவர்
வவுனியா பொது வைத்தியசாலை தாதிமார் பற்றாக்குறை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள்
முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்
60 தெங்கு ஆலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
`உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வினை காரணங்காட்டி அரசு மக்களை ஏமாற்றுகின்றது'
பெண்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் அரசின் உத்தேச பரிந்துரை குறித்து ஊடகவியலாளர்கள் பங்காற்ற வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com