உலகில் ஆகக் கூடுதலான அரச ஊழியர்கள் இலங்கையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் கருஜெயசூரிய, அவர்களில் அநேகர் குறைந்த ஊதியத்தில் பல சிரமத்துக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்வது குறித்து ஏதும் தெரிவிக்க வில்லை என அரசதுறை ஊழியர் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இலங்கையில் 17 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும், இந்தியாவில் 80 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும், அமெரிக்காவில் 240 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும் அரச ஊழியர்கள் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை, ஆளும் தரப்பு எம்.பி.க்களில் அமைச்சர்களின் எண்ணிக்கை பற்றியும் இலங்கையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் 110 அமைச்சர்கள், அவர்கள் அனுபவித்து வரும் சுகபோகங்கள் குறித்தும், இந்த நாடுகளில் காணப்படும் அரச ஊழியர்களுக்கான ஊதியங்கள் மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் தெரிவிக்காமை பற்றியும் தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன.