அனுராதபுரம் கெப்பிட்டிக்கொலாவ யக்காவெவப் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமகன் ஒருவரை இலக்கு வைத்தே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர் விவசாயி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஊர்காவல் படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர். இக்கிளைமோர் தாக்குதல் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.