நாட்டிலுள்ள அரிசி ஆலைகளை சோதனையிட அனுப்பப்பட்ட அதிகாரிகள் குழு, நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த விசாரணைகள் மின்னேரியா, பொலநறுவை, கதுருவெல, ஜெயந்திபுர, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளிலே மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.
அத்துடன், நுவரெலியா பகுதியில் 10 கிலோ எடை கொண்ட 35 அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்த இடமொன்றை விசாரணைக் குழு சுற்றிவளைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பர்மாவிலிருந்து ஒரு இலட்சம் தொன் அரிசி வரவுள்ள நிலையில், இவ்வாரம் 7 ஆயிரம் தொன் அரிசி அங்கிருந்து வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வெளியூர்களிலுள்ள அரிசி ஆலைகளிலிருந்து தேவையான அரிசியை இவ்வாரம் சந்தைக்கு விநியோகிக்க முடியுமென தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புதுவருட பண்டிக்கையையொட்டி அரிசி ஆலைகள் கடந்த 21 ஆம் திகதி மீளத் திறக்கப்பட்ட நிலையில் ஆலைகளிலிருந்து அரிசி விநியோகிப்படுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.