கொழும்பு புளுமெண்டல் பகுதியில் கொள்கலன் ஒன்றை சோ தனையிட்ட சுங்க அதிகாரிகள் அதற்குள்ளிருந்த சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட பொருட்களடங்கிய கொள்கலன்களை புளுமெண்டலிலுள்ள தங்களது சோதனைக் களஞ்சியத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை சோதனையிட்ட சுங்க அதிகாரிகளே சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான பொருட்களைக் கைப்பற்றி தடுத்து வைத்துள்ளனர்.
செய்மதி உள்வாங்கிகள், பெருமளவு வெளிநாட்டு சிகரட்டு வகைகள், ஏலம், சப்பாத்து வகைகள் உட்பட பெருமளவு பொருட்களே சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.உரிய பத்திரங்கள் மற்றும் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்டதாகக் கூறியே அந்தக் கொள்கலனில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் யாவும் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.