உரும்பிராய் கிழக்கில் நேற்று திங்கட் கிழமை காலை குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பலாலி வீதியிலுள்ள இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகளே அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.
தர்மலிங்கம் சிவநேசன் (33 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.