எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியாவுக்கு விஜயம் செய்கின்றார். கிண்ணியா நகர சபை மைதானத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் விஷேட உரைநிகழ்த்தவுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இத் தேர்தல் பிரசாரக் கூட்டம் முன்னாள் பாராளுமன்ற உறப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருமான எம்.ஏ.எம். மஹ்ரூப் தலைமையில் நடைபெறுகின்றது.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உரை நிகழ்த்துவர்.