கிளிநொச்சி இரணைமடு பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை விமானப்படைவிமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
இரணைமடு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையை அண்டியிருந்த கட்டிடத்தின் மீதே குண்டுவீச்சு விமானங்கள் நேற்றுக் காலை 9.45 மணியளவில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்தார்.
விமானப் படையினரின் இந்தத் தாக்குதலில் கட்டிடத்திற்கு பலத்த சேதமேற்பட்டதை விமானிகள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரணைமடு ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட புலிகளின் இலகுரக விமானங்களே நேற்று முன்தினம் அதிகாலை மணலாறு பகுதியில் இராணுவ நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியதாக படையினர் கருதுகின்றனர்.