Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முன்னைய நிலைப்பாட்டினை வாபஸ் பெற்றார் பகவதி
[29 - April - 2008] [Font Size - A - A - A]
பாரதூரமான மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பாகவும், மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குரிய அரசியல் துணிச்சல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லையெனவும் முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்களை இந்திய முன்னாள் தலைமை நீதிபதியும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் தலைவருமான பி.என். பகவதி வாபஸ் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு கடந்த 26 ஆம் திகதி அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் முன்னைய நிலைப்பாட்டை பகவதி வாபஸ் பெற்றுள்ளமை வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு:

தங்களைச் சந்திப்பதற்கு சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் உறுப்பினர்களான எனக்கும் சேர் நைஜல் ரொட்லிக்கும் பேராசிரியர் ஜொகொட்டாவுக்கும் வாய்ப்பளித்தமை தொடர்பாக நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தச் சந்திப்பில் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் பகிரங்க அறிக்கை தொடர்பாக எழுந்த சில விடயங்கள் தொடர்பாக கலந்தாராய்வதற்கும் விளக்கமளிப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பகிரங்க அறிக்கையிலுள்ள பிரதான விடயங்களில் ஒன்றாக இலங்கை அரசாங்கத்திடம் ்அரசியல் விருப்பம் இல்லை' என்பது தொடர்பான விடயம் சந்திப்பின் போது கலந்தாராயப்பட்டது.

பகிரங்க அறிக்கையில் சம்பந்தப்பட்ட பகுதி மீது கவனம் செலுத்துமாறு நான் தங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தாங்கள் அந்தப் பகுதியை பார்த்தீர்களானால் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவானது இலங்கை அரசாங்கம் மீது குற்றச்சாட்டியிருக்கவில்லை என்பதை தாங்கள் கண்டுகொள்ள முடியும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் அரசியல் விருப்பம் போதாமலிருக்கின்றது என்ற குற்றச்சாட்டை மாண்புமிக்கோர் குழு தெரிவித்திருக்கவில்லை.

்அரசியல் விருப்பம் இல்லாமை தொடர்பாக சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் கொண்டிருக்கும் எதிர்காலம் தொடர்பான அச்சம் என்றே பகிரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசின் தரப்பில் அரசியல் ரீதியான விருப்பம் இல்லை என்று மாண்புமிக்கோர் குழு ஒருபோதும் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கவில்லை. தம் முன்னால் இருக்கும் உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவானது எதிர்காலம் தொடர்பான அச்சம் குறித்து வெளிப்படுத்திய குரல் மட்டுமே இதுவாகும்.

எதிர்காலம் தொடர்பான அச்சத்தை தவிர அதற்கு மேலாக சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவால் வெளிப்படுத்த முடியாதென்பது நிச்சயமானதாகும். ஏனெனில், இலங்கை அரசாங்கத்திடம் அரசியல் விருப்பு உள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடிப்பதற்கான சட்ட நியாயாதிக்கம் குழுவுக்கு இல்லை.

விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையானது வெளிப்படைத் தன்மையுடன் காணப்படுகின்றதா என்பது பற்றியும் சர்வதேச விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்பது குறித்தும் அவதானிப்பதுடன் குழுவின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை ஆணைக்குழு சம்பந்தமாக இதுவரை அக்குழு சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் தலைவர், உறுப்பினர்களிடமிருந்து சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவுக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. விசாரணை ஆணைக்குழு தனது பணியை முன்னெடுக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கை அரசுக்கும் விசாரணை ஆணைக்குழுவுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பகவதி கூறியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
நீரில் மூழ்கியது இரத்தினபுரி ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு
மலையகத்தின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்துக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு
பகவதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்'
முன்னைய நிலைப்பாட்டினை வாபஸ் பெற்றார் பகவதி
இரணைமடுவில் விமானத் தாக்குதல்
ரணில் இன்று கிண்ணியாவில் பிரசாரம்
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
தற்கொலை குண்டுதாரிக்கு உதவியதாக கைதான பெண் சி.ஐ.டி. விசாரணைக்குட்பட்டவேளையில் மரணம்
கல்கமுவ பஸ் நிலையத்தில் சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டு
வடமாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு போராட்டம்
தென்பகுதியில் கடும் கடற்கொந்தளிப்பு பெருமளவு இழுவைப்படகுகள் நாசம்
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சிறுவர்களை அனுப்பிய மூவர் கைது
கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 2 1/2 கோடி ரூபா பொருட்கள் தடுத்து வைப்பு
கொக்குவிலில் காணாமற்போன இளம் தாயின் சடலம் பாழடைந்த வீடொன்றில் கண்டுபிடிப்பு
கிழக்கில் ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக அரசு பல்வேறு விதங்களிலும் அடாவடித்தனங்கள்
பஸ்குண்டு வெடிப்புகளையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இரு நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மடு அன்னையின் திருச்சொரூபம் தேவாலயத்திற்கு வரும்
அரிசி ஆலைகளை சோதனையிட்ட குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது
கிளைமோர் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு
வெள்ளம், மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா உதவி
அலுவலகங்களில் சிறந்த முகாமைத்துவத்தை கொண்டிருந்தால் மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்ற முடியும்
வடபகுதியை மீட்க யுத்தம் நடைபெறும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்
அமைச்சர் கருஜெயசூரியவின் கருத்துக்கு அரசதுறை ஊழியர் தொழிற்சங்கம் கண்டனம்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ விரும்புவதில்லை
க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு அடுத்த மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு
சிற்றுண்டிச்சாலை குடிநீரில் மனிதக் கழிவு நீர்
வவுனியா - கொழும்பு ரயில் சேவையை வவுனியா வரை நடத்துமாறு கோரிக்கை
வெளிநாடுகளுக்கு பொதி அனுப்பும் நிறுவனங்களில் அதிக கட்டணம் அறவீடு
24 பொதுமக்களை பலிகொண்ட குண்டுவெடிப்பு கண்டிக்கப்படவேண்டிய கொடூர வன்முறை
குண்டை வெடிக்க வைத்து இராணுவச் சிப்பாய் தற்கொலை
மாத்தளையில் திடீர் தேடுதல்; 15 பேர் கைது
பணிப்பாளர் ஆண் தாதியை ஏசியதால் மாத்தறை வைத்தியசாலையில் பகிஷ்கரிப்பு
மட்டக்களப்பில் 136 இடங்களில் தபால்மூல வாக்களிப்பு
கொழுந்து கொள்முதல் செய்யக் கொண்டு சென்ற 2 1/2 இலட்சம் ரூபா துப்பாக்கி முனையில் கொள்ளை
தபால் மூல வாக்களிப்பில் வாக்காளர்கள் உற்சாகம்
புதிய வகை காய்ச்சலினால் மாத்தளையில் இருவர் மரணம்
எத்தகைய இடர்வரினும் விடுதலைக்கனலை நெஞ்சில் சுமந்து சுதந்திர தாயகத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்
கொட்டாஞ்சேனையில் அத்துமீறி தேடுதல் மேலக மக்கள் முன்னணி கண்டனம்
வோல்றீம் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை தீயில் எரிந்து நாசம்; பெருமளவிலான சேதம்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல துணைபுரிந்தவர்
வவுனியா பொது வைத்தியசாலை தாதிமார் பற்றாக்குறை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள்
முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்
60 தெங்கு ஆலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
`உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வினை காரணங்காட்டி அரசு மக்களை ஏமாற்றுகின்றது'
பெண்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் அரசின் உத்தேச பரிந்துரை குறித்து ஊடகவியலாளர்கள் பங்காற்ற வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com