Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
கில்கிறிஸ்ட் அதிவேக சதமடித்ததால் டெக்கான் சார்ஜர்ஸ் இலகுவான வெற்றி
[29 - April - 2008] [Font Size - A - A - A]
கண் இமைக்கும் நேரத்தில் கில்கிறிஸ்ட் அதிவேக சதம் அடித்து சாதிக்க... லட்சுமண் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் `ருவென்ரி- 20' தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்த இரு அணிகளும் இம்முறை முதல் வெற்றியை எதிர்பார்த்துக் களமிறங்கின.

காயம் காரணமாக இப் போட்டியிலும் சச்சின் பங்கேற்கவில்லை. ஷ்ரீசாந்த் விவகாரத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஹர்பஜனும் இடம்பெறாததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் பொறுப்பை பொலக் ஏற்றார். நாணயச் சுழற்சியில் வென்ற லட்சுமண் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோஞ்சி (13), ஜெயசூரியா (18) மீண்டும் ஏமாற்றினர். இவரைத் தொடர்ந்து ரஹானே (0), உத்தப்பா (6) ஆட்டமிழந்து வரிசையாக வெளியேறினர். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 55 ஓட்டங்கள் எடுத்துத் திணறியது.

பின்னர் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடிய பொலக், பங்கார் பந்தில் `கிளீன் போல்டானார்'. இவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட, 31 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அபிஷேக்நாயர், கல்யான்கிருஷ்ணா வீசிய 15 ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 3 சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 19 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்தார், பிராவோ அதிரடியாக 34 ஓட்டங்கள் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலகுவான இலக்கை விரட்டிய டெக்கான் சார்ஜர்ஸின் கில்கிறிஸ்ட் அதிரடியாக ஆடினார். நெஹ்ரா வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி அடித்தார். பொலக், குல்கர்னியின் ஓவர்களிலும் பவுண்டரி விளாசினார். ஜெயசூரிய வீசிய 5 ஆவது ஓவரில் முதல் சிக்சர் அடித்தார். இதற்குப் பின் இவரது வாணவேடிக்கையால் அரங்கம் அதிர்ந்தது. பொலக் வீசிய 7 ஆவது ஓவரில் 3 இமாலய சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 23 ஓட்டம் எடுத்தார். பிராவோ வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார்.

நாய வீசிய 10 ஆவது ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 22 ஓட்டம் எடுத்த கில்கிறிஸ்ட் 42 பந்தில் 100 ஓட்டங்களை எட்டினார். இவரது அதிரடி தொடர, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 155 ஓட்டங்கள் எடுத்து தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. கில்கிறிஸ்ட் 109 (9 பவுண்டரி, 10 சிக்சர்), லட்சுமண் 36 (5 பவுண்டரி) ஆட்டமிழக்காமலிருந்தனர். ஆட்ட நாயகனாக கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி சோகத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் சச்சின் களமிறங்கினால் மட்டுமே ஐ.பி.எல். தொடரில் மானம் காக்க முடியும்.

புதிய சாதனை

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கில்கிறிஸ்ட் விஸ்வரூபம் எடுத்தார்.

வழக்கம் போல் அதிரடி காட்டிய இவர் 42 ஆவது பந்தில் 100 ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் ஐ.பி.எல்., தொடரில் அதிவேக சதம் அடித்து புதிய சாதனை படைத்தார். முன்னதாக, டெக்கான் அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு அவு ஸ்திரேலிய வீரரான சைமண்ட்ஸ் `ராஜாஸ்தான் ரோயல்ஸ்' அணிக்கு எதிராக 47 பந்தில் சதமடித்திருந்தார்.

Email this page Your Opinion Print this page
ஹர்பஜன் தாக்கிய வீடியோ ஆதாரம் கிடைத்தது ஆயுள்கால தடை விதிக்கப்படும் சாத்தியம்
டில்லி மோசமான துடுப்பாட்டம் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது
கில்கிறிஸ்ட் அதிவேக சதமடித்ததால் டெக்கான் சார்ஜர்ஸ் இலகுவான வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com