பிரிட்டனில் இறந்த குழந்தை ஒன்றின் உடலை சூட்கேஸில் வைத்து பூட்டி 50 ஆண்டுகளாக தாய் ஒருவர் பாதுகாத்து வந்தமை தெரிய வந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த கிளாடிஸ் மேரி பிரிக்ஸ் என்பவர் நடன பயிற்சியாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
1957ஆம் ஆண்டில் பிரிக்ஸுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை ஒரு சில மாதங்களில் இறந்துவிட்டது.
இறந்த குழந்தையின் உடலை புதைக்க மனம் இல்லாத தாய் அதை ஒரு சூட்கேசில் வைத்து பூட்டி தனது அடுக்குமாடி குடியிருப்பில் 50 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார்.
இந்த ஆண்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரிக்ஸ் தனது வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
நீண்ட நாட்களாக அவரின் வீடு பூட்டியிருப்பதாக அயலவர்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது சூட்கேசில் குழந்தை ஒன்றின் உடல் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் குழந்தை இறந்த காலப்பகுதியில் வெளியான பத்திரிகை ஒன்றும் இருந்தது. இருப்பினும் விசாரணையின் போது குழந்தை பற்றிய விபரங்களை பொலிஸாரிடம் தெரிவிக்க பிரிக்ஸ் மறுத்துவிட்டார்.