2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மிகவும் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற 8 மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் ஜூலை மாதம் ஜப்பான் பியூகோகா நகரில் நடைபெறவிருக்கும் 20 ஆவது ஆசிய பசுபிக் சிறுவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து இம் மாணவர்களை அனுப்ப கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
"உலக சமாதான சகவாழ்வு" எனும் தொனிப்பொருளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மகாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையிலிருந்து செல்ல இருக்கும் சிறுவர்களுடன் வட்டுக்கெதர சிறீபதி மகா வித்தியாலய ஆசிரியை சுஜீவா லக்மாலாவும் பயணமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.