கம்பளை நகரில் கண்டி வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற இச் சம்பவத்தில் கம்பளை வெலயைச் சேர்ந்த டன்சன் ஜயசிறி (வயது-59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் விபத்தில் படுகாயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கம்பளை பேராதனை வீதியில் இடம் பெற்ற ஆட்டோ விபத்தில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.