நாட்டில் அடுத்த சில மாதங்கள் இடி மின்னலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் எனவும் அதனால் பொதுமக்கள் மின் உபகரணங்களை இடி மின்னல் நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இடி மின்னல் தாக்குதல்களால் பலர் அண்மைக்காலங்களில் உயிரிழந்துள்ள சம்பவங்களையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இடிமின்னல் காலங்களில் வீடுகளில் இருப்பவர்கள் கதிரைகளில் அல்லது கட்டில்களில் இருந்து கால்களை தூக்கி நிலத்தில் படாதவாறு அமர்ந்து இருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
வெளிகள், கடற்கரை ஓரங்கள், போன்றவற்றில் நடமாடுவதை தவிர்க்கும்படியும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
இடி மின்னல் ஏற்படுகின்றபோது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவது, தொலைக்காட்சி, வானொலிகளை பாவிப்பது என்பவற்றை முக்கியமாக தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.