இவ்வருடம் நடைபெறவிருக்கும் பொசன் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அநுராதபுரம் நகரப் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த வருடங்களில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதற்காக வரும் பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் தங்கியிருப்பதற்காக அநுராதபுரம் மற்றும் மிகிந்தலை நகரப்பகுதியை அண்டிய பாடசாலைகள் மட்டும் மூடப்படுகின்ற போதும் இம்முறை அநுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பத்தொன்பது பாடசாலைகளும் மிகிந்தலைக் கோட்டத்திலுள்ள ஒன்பது பாடசாலைகளுமாக மொத்தம் இருபத்தெட்டு பாடசாலைகள் மூடப்படவுள்ளன. எதிர்வரும் 2008.06.13 ஆம் திகதி மூடப்படவிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 28 பாடசாலைகளும் மீண்டும் 2008.06.23 ஆம் திகதியே திறக்கப்படும்.
அநுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள மத்திய மகா வித்தியாலயம், ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயம், கே.பி. ரத்னாயக்க வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், ஸாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம், தம்மதிலக வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், தீபானி வித்தியாலயம், தேவ நம்பியதிஸ்ஸ வித்தியாலயம், பொத்தானேகம வித்தியாலயம், றத்மலே திஸ்ஸ வித்தியாலயம், அலுத்வெவ குமார வித்தியாலயம், நிவந்தக சேதிய மகா வித்தியாலயம், மான்கடவல வித்தியாலயம், ஹதரஸ்வெல வித்தியாலயம், கலத்தாவ வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம், பெரிமியன்குளம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் மிகிந்தலை கல்விக் கோட்டத்திலுள்ள மிகிந்தலை மகா வித்தியாலயம், மகிந்தலை முஸ்லிம் வித்தியாலயம், கல்குளம் வித்தியாலயம், கம்மலக்குளம் வித்தியாலயம், உக்குலன்குளம் வித்தியாலயம், கனந்தராவ பிரிவு ஒன்று சிங்கள வித்தியாலயம், றம்பாவ மகா வித்தியாலயம், குருந்தன் குளம் வித்தியாலயம், கனந்தராவ பிரிவு இரண்டின் சிங்கள வித்தியாலயம் என்பனவும் மூடப்படவுள்ளன என வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். சமரசிங்க அறிவித்துள்ளார்.