நாடு முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் டெங்கு நோய் காரணமாக 6 பேர் மரணமானதாகவும் 2096 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தேசிய டெங்கு தடுப்புப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் லக்ஸ்மன் டீ. சில்வா தெரிவித்தார்.
இதில் புத்தளம் மாவட்டத்தில் 133 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 259 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 372 நோயாளிகளும், குருநாகல் மாவட்டத்தில் 316 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 355 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 322 நோயாளிகளும், கேகாலை மாவட்டத்தில் 339 நோயாளிகளும் இனம் காணப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைக் கட்டுப்படுத்த கழிவு பொருட்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதின் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு நுளம்பு உற்பத்திக்கு காரணமான காரணிகளை அழித்து விடுதல் அவசியமாகும்.