|
40 மில்லி மீற்றர் மோட்டார்களுக்கு பயன்படுத்தும் ஐந்து குண்டுகளை அநுராதபுரம் எஸ்.ஓ.எஸ். சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கருகிலுள்ள நீரோடை ஒன்றிலிருந்து கண்டெடுத்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத் பிரேம தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவொன்றே மேற்படி மோட்டார் குண்டுகளைக் கண்டெடுத்துள்ளதாகவும் இப்பகுதிக்கு இவை எவ்வாறு வந்துசேர்ந்தன என்பது பற்றி விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். |