பிரதி பொலிஸ் மா அதிபர் ரீ.டபிள்யூ. பிரதாப் சிங்கை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அது தொடர்பான அவரது விண்ணப்பத்தை பரீசிலிக்குமாறு உயர் நீதிமன்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான இவர் தனது சேவைகள், மூப்பு அடிப்படையில் தகுதி இருந்தும் தனக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியை வழங்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மறுத்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதாப் சிங் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.