ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவார நடுப்பகுதியில் ஜனாதிபதி சீனா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அவர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் அங்கு செல்பவர்கள் குறித்து இதுவரை முடிவு செய்யப்படாத போதும் பெரியதோர் குழுவொன்று அங்கு செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.