பொலநறுவை மின்னேரியா கட்டுகலியாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத்தினரில் மேலுமொருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம், இந்த மின்னல் தாக்குதலில் உயிரிழந்த படையினரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை இந்த மின்னல் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் 65 படையினர் படுகாயமடைந்திருந்தனர்.
இவர்கள் பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19 பேர் நேற்று சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
மேலும் 37 படையினர் பொலநறுவை ஆஸ்பத்திரியில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவர் இராணுவ வைத்திய சாலையிலும், இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.