கட்டுநாயக்காவிலிருந்து அம்பாறை நோக்கி சென்ற வான் கொடக்கவெல மல்வத்த பிரதேசத்தில் தனியார் பஸ்ஸுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு, சாரதி உட்பட பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்த நிலாம் மொஹிதீன் மொகமட் (வயது 50) என்பவரே நேற்று இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
கட்டுநாயக்காவிலிருந்து வாடகை வான் ஒன்றில் இவரின் அக்கரப்பத்துவானை வசிப்பிடத்திற்குச் சென்றபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடனேயே இவ் வான் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் வானின் இரு கதவுகளும் கழன்றுள்ளதோடு சாரதிக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் வானில் பயணித்த மேலும் 5 பேருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.நெலும்தெனியவின் வழிகாட்டலில் போக்குவரத்து பிரிவு பரிசோதகர் ஜி.ஜினதாஸ விசாரணைகளை மேற்கொண்டு பஸ் சாரதியை கைதுசெய்துள்ளார்.