Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
[03 - April - 2008] [Font Size - A - A - A]
*விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

மன்னார் மடு தேவாலயத்தை அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் சார்பு இணையத்தளமொன்று கூறுகையில்;

மன்னார் மடுப்பகுதிக்கு 1,500 மீற்றர் தொலைவில் கடும் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மடுவுக்கு தெற்காகவுள்ள பண்டிவிரிச்சான் பக்கமாக 1,500 மீற்றர் தொலைவில் கடந்த இரு நாட்களாக படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் போது படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

பண்டிவிரிச்சான் பகுதியிலிருந்து மடு புனித வளாகப்பகுதியில் தொடர்ச்சியாக படையினர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மடு கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கோவிலுக்குரிய பகுதிகளில் படையினரின் ஷெல்கள் வீழ்ந்து வெடிக்கின்றன. இதனால், கோவிலுக்குரிய கட்டடங்கள், கிணறுகள் ஆகியன சேதமாகியுள்ளன.

எங்கும் ஷெல்கள் வீழ்ந்து வெடிக்கின்றன. கோவிலுக்குள்ளிருக்கும் மடுப் பரிபாலகர், மதகுருமார் மற்றும் கோவில் பணியாளர்கள் இரண்டு நாட்களாக பதுங்கு குழிக்குள் தான் இருக்கின்றனர்.

அரசு, மடு தேவாலயத்தை அழிக்கும் வகையில் தாக்குதலை தொடர்ந்தும் மிகக் கடுமையாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில்;

"படையினரின் தாக்குதல்கள் மடு தேவாலய வளாகத்தினுள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. மடு தேவாலயப் பகுதியை நாம் ஆட்லறி ஷெல் தாக்குதலுக்கான நிலைகளாக பயன்படுத்துவதாக அரசும் படையினரும் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

எம்மிடம் நீண்ட தூர ஆட்லறிகளும் மோட்டார்களுமிருக்கையில் நாம் ஏன் மடு தேவாலயப் பகுதியை ஷெல் தாக்குதல்களுக்கான நிலைகளாகப் பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மடு தேவாலயப் பகுதியை இலக்காக வைத்து அரசும் படையினரும் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பித்த போது, தேவாலயப் பகுதியை யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு தேவாலய நிர்வாகம் எம்மிடம் கேட்ட போது, நாம் அதற்கு பூரண ஆதரவு வழங்கினோம்.

எனினும், இலங்கை அரசோ, படையினரோ இதற்கு ஆதரவு வழங்கவில்லை. மாறாக, மடு தேவாலயப் பகுதியை இலக்கு வைத்து பாரிய தாக்குதலை ஆரம்பித்து அப்பகுதியிலிருந்து மக்களை ஷெல் தாக்குதல் மூலமும் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதல் மூலமும் விரட்டியடித்ததாக"வும் தெரிவித்துள்ளார்.

மணல்மோட்டை பகுதி மோதலில் 10 படையினர் பலி

இதேநேரம், மன்னார் கட்டுக்கரை மணல் மோட்டைப் பகுதியிலிருந்து படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நேற்று அதிகாலை 5 மணிக்கு மேற்கொண்டுள்ளனர். பாலைப்பெருமாள் கட்டுப் பகுதி நோக்கியதாக படையினரின் முன்நகர்வுத் தாக்குதல்கள் அமைந்துள்ளன. இங்கு மோதல்கள் தொடர்கின்றன.

நேற்று மாலை வரை இந்த நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தும் கடும் பதில் தாக்குதல்களில் படையினர் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 40 க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Email this page Your Opinion Print this page
தாயகத்தில் தமிழர்களை குழிதோண்டி புதைக்க அரசு வைத்திருக்கும் பயங்கரப் பொறியே கிழக்குத் தேர்தல்
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி ஒருபோதும் உறுதியளிக்கவில்லை
வில்பத்துக்குள் இருவர் சுட்டுக்கொலை
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
மு.கா.ஒத்துழைப்புடன் ஐ.தே.க. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும்
சாதாரணதரப் பரீட்சை; வட, கிழக்கு மாணவர்கள் பெரும் சாதனை
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
மடுப் பகுதியை சமாதான வலயமாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் அமைதிப் பேரணி
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
மழையினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும்
டாக்டர் முத்துலிங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா சந்திப்பு
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருடன் ரோகித்த போகொல்லாகம சந்திப்பு
நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
வன்னியில் இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள்
உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்
பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
விசுவமடுப்பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
மல்வத்தயில் பஸ்- வான் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மூவின மக்களும் அச்சுறுத்தப்படும் நிலை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் 120 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மின்னல் தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் மரணம்
தாழ்வுபாட்டை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளைவானில் அழைத்து செல்லப்பட்டார்
ஹெப்பிட்டிக்கொலாவவின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையிலிருந்து பொருட்கள் கடத்திய 5 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்
பிரதி பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் மனு
அநுராதபுர நீரோடையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு
கொடக்கவெல வாகன விபத்தில் ஒருவர் பலி
இடி மின்னல் தாக்கி இருவர் பலி
2 1/2 மாதத்தில் 6 டெங்கு நோயாளர் மரணம் 2096 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
`பொசன்' பண்டிகைக்காக கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் 28 பாடசாலைகள் மூடப்படுகின்றன
இடிமின்னல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி வீதி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
எட்டு மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு
17 பேரையும் அக்ஷன்பாம் நிறுவனம் காப்பாற்றத் தவறியமை முதல்பிழை
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை மீறப்பட்டமையின் விளைவே யுத்தம்
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மாவட்ட தொண்டராசிரியர் நியமனத்தில் குழறுபடியென பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்கள் திருகோணமலையில் மீளக் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com