முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் நேற்று புதன்கிழமை காலை விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
நேற்றுக்காலை 9.20 மணியளவில் விசுவமடுக்குளத்திற்கு மேற்கே விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இடமொன்றின் மீதே இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக படையினர் தெரிவித்தனர்.
விமானப்படையின் இரு விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் இலக்கு துல்லியமாக அழிக்கப்பட்டதாகவும் இதனால் புலிகளுக்கு பலத்த சேதங்களேற்பட்டுள்ளதை விமானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வன்னியில் குண்டு வீச்சுவிமானங்கள் தொடர்ந்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் படையினர் தெரிவிக்கின்றனர்.