யாழ்.மாவட்டத்தில் உலகவங்கியின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களை மதிப்பிடவும், எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில், தீர்மானிக்கப்பட வேண்டிய யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை மதிப்பிடவும் உலகவங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நோக் இசக்கீஸ் அம்மையார் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.
இக்குழுவினர், நேற்று முன்தினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குச் சென்று, நீதிமன்ற வளாகத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றவளாக கட்டிடத்துக்கு நிதி வழங்குவது பற்றியும் கலந்துரையாடினர்.
இதேவேளை, யாழ்ப்பான செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்பட திணைக்களத்தலைவர்களுடன் யாழ்.மாவட்ட அபிவிருத்தித்திட்ட மதிப்பீடுகள் பற்றியும் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.