பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் கிழக்கின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அங்கு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் நம்பகத் தன்மையுடன் நடைபெறும் என்ற உத்தரவாதம் உள்ளடங்கலாக கிழக்கு மாகாணத்தில் அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் பொதுநலவாயம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் இருதரப்புகளினதும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றியும் இருதரப்பு நட்புறவுகளையும் தொடர்ந்தும் பேணுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.