அகால மரணமான மொனராகலை பிரதேச சபை உபதலைவரான டாக்டர் ஏ.என். முத்துலிங்கத்தின் பூதவுடல் நேற்று புதன்கிழமை மாலை 2 மணியளவில் பதுளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது பூதவுடல் பதுளை மாவட்ட மக்களின் அஞ்சலிக்காக அன்னாரது பதுளை பிட்டியாவிலுள்ள பதுளை இல்லத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.
பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஸ், வி.புத்திரசிகாமணி, எம்.எஸ்.செல்லசாமி, எம்.சச்சிதானந்தன், அமைச்சர் டிலான் பெரேரா, ஊவா மாகாண முதலமைச்சர் காமினி விஜித் விஜய முனி சொய்சா, ஊவா மாகாண சபைத் தலைவர் மானெல் ரட்னாயக்க, ஊவா மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்குமார் உள்ளிட்ட அரசியல், தொழிற்சங்கப் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.