* பிரதியமைச்சர் சச்சிதானந்தன் வேண்டுகோள்
அண்மையில் பெய்த தொடர் மழையினாலும், மண் சரிவினாலும் பாதிப்புக்குள்ளான மலையக மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம் மழை காரணமாக மலையகத்தில் பல குடியிருப்புகள் வெள்ளத்தினால் அள்ளுண்டு போனமை மாத்திரமல்லாது, மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பெரும் பாலான மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகி பாடசாலை செல்ல முடியாதிருந்தமையை பிரதி கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தமையைடுத்து மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தினை உடன் வழங்குமாறு அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு மற்றும் சமூக சேவைகள் பணிப்பாளர் வேண்டுகோளுக்கு அவசர தொலைநகல் மூலம் அவர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதுதவிர, பதுளை மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான சுமார்150 குடும்பங்களின் நிவாரணப்பணிகளை உடன் மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரை பணித்துள்ளது மாத்திரமல்லாது, பாதிப்புற்ற மாணவர்களுக்குக்கான பாடப்புத்தகங்கள், அப்பியாச கொப்பிகள், சீருடைகள் போன்றவற்றினை பெற்றுக் கொடுக்கவும் பிரதிக் கல்வி அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.