Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
[03 - April - 2008] [Font Size - A - A - A]
தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படமான `பிரபாகரன்' படத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை நீதிமன்றம், சென்னை ஜெமினி வண்ண ஆய்வகத்திலிருந்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட எவரிடமும் பிரபாகரன் படத்தின் படச்சுருள்களையோ அதன் பிரதிகளையோ இருவாரகாலத்துக்கு கொடுக்கக் கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளது.

"பிரபாகரன்" என்ற பெயரில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு சென்னையில் மேலதிக பணிகளை மேற்கொண்டிருந்த சிங்களத் திரைப்படத்தை முடக்க வேண்டும் என்றும் அப்படத்தின் பிரதிகளை இந்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை மாநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை வழங்க்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று புதன் கிழமை நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொல்.திருமாவளவனின் சட்டத்தரணிகளான இளமாறன், ஆர்வலன் ஆகியோர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஏ.ஆர்.எல்.சுரேஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தெரிவித்ததாவது;

இந்தத் திரைப்படம் மொத்த தமிழினத்தையே இழிவுபடுத்தக் கூடியது. அதேபோல் இப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போனவர்களை `வன்முறைக்கும்பல்கள் என்று சிங்கள திரைப்பட இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இது அவர்களின் மதிப்பையும் சீர்குலைப்பதாகும்.

சிறார்களை படையணிகளில் விடுதலைப்புலிகள் சேர்ப்பதாக பொய்யான தகவல்களை அந்தப் படத்தில் இணைத்துள்ளனர். அதேபோல் செஞ்சோலைப் படுகொலையை மறைத்து பாடசாலை சிறார்கள், போர்க்களத்தில் கொல்லப்பட்ட சிறார்கள் என்றும் பொய்யான காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும், சிங்களவர்கள் உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்ந்திருப்பதாக பொய்யான தகவலைக் கொண்டுள்ளது இப்படம். நோர்வேயின் அனுசரணையிலான சமாதானத்தை எதிர்க்கின்ற காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, இரு வேறு இனங்களுக்கிடையே ஆழமான விரிசலையும் மோதலையும் இப்படம் ஏற்படுத்தும் என்றார் மூத்த சட்டத்தரணி சுரேஸ்.

இதனைக் கேட்ட நீதிபதி, சென்னை ஜெமினி வண்ண ஆய்வகத்திலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட யாரிடமும் பிரபாகரன் படத்தின் சுருள்களையோ அதன் பிரதிகளையோ இரு வாரகாலத்துக்கு எவரிடமும் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

Email this page Your Opinion Print this page
தாயகத்தில் தமிழர்களை குழிதோண்டி புதைக்க அரசு வைத்திருக்கும் பயங்கரப் பொறியே கிழக்குத் தேர்தல்
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி ஒருபோதும் உறுதியளிக்கவில்லை
வில்பத்துக்குள் இருவர் சுட்டுக்கொலை
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
மு.கா.ஒத்துழைப்புடன் ஐ.தே.க. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும்
சாதாரணதரப் பரீட்சை; வட, கிழக்கு மாணவர்கள் பெரும் சாதனை
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
மடுப் பகுதியை சமாதான வலயமாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் அமைதிப் பேரணி
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
மழையினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும்
டாக்டர் முத்துலிங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா சந்திப்பு
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருடன் ரோகித்த போகொல்லாகம சந்திப்பு
நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
வன்னியில் இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள்
உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்
பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
விசுவமடுப்பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
மல்வத்தயில் பஸ்- வான் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மூவின மக்களும் அச்சுறுத்தப்படும் நிலை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் 120 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மின்னல் தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் மரணம்
தாழ்வுபாட்டை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளைவானில் அழைத்து செல்லப்பட்டார்
ஹெப்பிட்டிக்கொலாவவின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையிலிருந்து பொருட்கள் கடத்திய 5 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்
பிரதி பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் மனு
அநுராதபுர நீரோடையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு
கொடக்கவெல வாகன விபத்தில் ஒருவர் பலி
இடி மின்னல் தாக்கி இருவர் பலி
2 1/2 மாதத்தில் 6 டெங்கு நோயாளர் மரணம் 2096 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
`பொசன்' பண்டிகைக்காக கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் 28 பாடசாலைகள் மூடப்படுகின்றன
இடிமின்னல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி வீதி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
எட்டு மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு
17 பேரையும் அக்ஷன்பாம் நிறுவனம் காப்பாற்றத் தவறியமை முதல்பிழை
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை மீறப்பட்டமையின் விளைவே யுத்தம்
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மாவட்ட தொண்டராசிரியர் நியமனத்தில் குழறுபடியென பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்கள் திருகோணமலையில் மீளக் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com