* பாராட்டுகிறார் பரீட்சை ஆணையாளர் அநுர
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் வடகிழக்கு மாணவர்கள் மிகச் சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்திருப்பதாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய அம்பாறை- காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் சாலினி அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ளார்.
சிங்கள மொழியில் பரீட்சைக்கு தோற்றிய கொழும்பு விசாக்கா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமலி ஜயசிங்க அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ளதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டதுடன், தமிழ் மொழியில் பரீட்சைக்கு தோற்றிய வடகிழக்கு மாணவர்கள் தமது உச்சகட்ட திறமையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மொழியில் கூடிய புள்ளிகளைப் பெற்று முதல் 10 ஸ்தானம் பெற்ற மாணவர்கள், பாடசாலைகள் விபரம்;
தமிழ்மொழி விபரம்
1. சந்திரசேகரன் சாலினி (காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி).
2. குகநாதன் நிரூஜன் (யாழ்.இந்துக் கல்லூரி).
3. நரேந்திரன் திருத்தணிகன் (யாழ்.இந்துக் கல்லூரி).
4. ருக்ஷிகா சந்திரபோஸ் (யாழ். வேம்படி உயர் மகளிர் பாடசாலை).
5. ஆனந்தலிங்கம் நிதர்ஷன் (கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி).
6. சுமங்கலி சிவகுமாரன் (யாழ். வேம்படி உயர் மகளிர் பாடசாலை).
7. டிரஞ்சலாதேவி பத்மநாதன் (திருகோணமலை ஷ்ரீ சண்முகா கல்லூரி).
8. ரேகா பாலசுப்ரமணியம் (வெள்ளவத்தை ராமகிருஷ்ண வித்தியாலயம்).
9. தாரணி சுந்தரம் (யாழ்.வேம்படி உயர் மகளிர் பாடசாலை).
10. விக்னேஸ்வரன் சஞ்ஜீவ் (மட்டக்களப்பு மைக்கல் தேசிய பாடசாலை).
சிங்கள மொழி மூலம்
1. அமலி ஜயசிங்க (கொழும்பு விசாக்கா கல்லூரி).
2. ஜனீஷா குணவர்தனா (கொழும்பு விசாக்கா கல்லூரி).
3. அவினாஷ் சூரியாராச்சி (கொழும்பு நாலந்தா கல்லூரி).
4. வர்ணகுல பெரேரா (நீர்கொழும்பு அல்மேரியா கல்லூரி)
5. உத பண்டார (குருநாகல் மலியத்தேவ ஆண்கள் பாடசாலை).