வில்பத்து வனவிலங்கு சரணாலயத்திற்குள் நேற்று புதன்கிழமை பிற்பகல் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இருவரும் தந்தையும் மகனுமென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் தாங்கள் வில்பத்து சரணாலயத்திற்குள் விறகுவெட்டச் சென்றதாகவும் அவ்வேளையில் அங்கு ஆயுதங்களுடன் வந்த சிலர் தனது கணவனையும் மகனையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளனர்.
65 வயதான தந்தையும் அவரது 16 வயது மகனுமே கொல்லப்பட்டதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர் இரு சடலங்களும் பொலிஸாரால் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. இதேநேரம், ஆயுதபாணிகளைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் படையினரும் பொலிஸாரும் கூட்டாக இறங்கியுள்ளனர்.