Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
[03 - April - 2008] [Font Size - A - A - A]
எதிர்கொள்ளும் இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு ஐ.நா. மேற்பார்வையுடனான இரு அரசுத்தீர்வானது யதார்த்த பூர்வமான ஆய்வாக அமையுமென்று சுவீடிஷ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனநெருக்கடி தொடர்பாக சர்வதேச கருத்தரங்கொன்று லண்டனில் கடந்த மார்ச் 22-23 இல் உலக சமாதான ஆதரவுக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றபோது அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை. ஐரோப்பிய ஒன்றியம், தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் பேராசிரியர் பீற்றர் சோக் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;

தமிழர்கள் மட்டுமல்லாது, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள சகல குடியேற்ற வாசிகளும் மற்றும் ஐரோப்பிய பிரஜைகளும் மனித உரிமைகள் மீதான புதிய அரசாங்கத்தின் அனுசரணையுடனான தாக்குதல்களுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இதுவென பேராசிரியர் ஜோன் நீல்சன் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார். துன்பப்படும் சிறுபான்மையினருக்கான உறுதியான ஆதரவை வெளிப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் நீண்ட கால நலன்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய வேளை இதுவென அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின் அறிக்கையாகும்.

பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஹெய்ட் மாரி வைஸ் சோரைக் கீயுல் இலங்கை மீதான பொருளாதாரத் தடைகள் பற்றி யோசனை தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் அளித்தால் இது சர்வதேச தலையீட்டின் ஆரம்பமாகவும். கிழக்குத் திமோரில் இடம்பெற்றது போன்ற மனிதாபிமான ரீதியான இராணுவத் தலையீடாகவும் அமையுமென்பது எனது கருத்தாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி அரசியல் வாதிகளின் கருத்துகள் வெளிவிவகாரங்களுக்கான ஐரோப்பிய அமைச்சுகளின் நிர்வாக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் ஒருபகுதியாகும். ஐரோப்பாவிலுள்ள இந்த நிர்வாகிகளின் செயற்பாட்டு சூழ்நிலை உகந்ததாக இல்லை.

தமிழ் எதிர்ப்பு இயக்கமானது தமிழர்களை எப்போதுமே பாதிக்கப்படுபவர்களாக விபரிப்பதாக அதிர்ச்சியளிக்கும் கருத்தை இரு சுவீடிஷ் இராஜதந்திரிகள் தெரிவித்திருந்தனர். அரச அடக்குமுறையின் கீழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கு கூட இடமளிக்கப்படவில்லை என்பதே எனது கருத்தாகும்.

இந்த ஐரோப்பிய அரசியல் வாதிகள், இராஜதந்திரிகள் எப்போதுமே வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து அரக்கத்தனமான சிருஷ்டியாகவே சித்திரிக்கின்றனர். எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரது உரைகளை கேட்டிருக்கின்றேன். அவரது யதார்த்த பூர்வமான தன்மையினால் தீமையான சக்தியாக அவர் குற்றம் சாட்டப்படுவது சமத்துவப்படுத்தப்படுகிறது. இதனை ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டுமே தவிர புறக்கணிக்கக்கூடாது.

2006 இல் தடை செய்யப்படுவதற்கு முன்பு இருந்த நிலைமையானது தமிழ் எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து அறிந்து கொள்வதற்கும் ஜனநாயக பெறுமானங்கள் குறித்து அந்த அமைப்புக்கு போதிப்பதற்கும் உகந்ததாக காணப்பட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை எட்டும் நடவடிக்கைகளை மோசமாக குழப்புவதாக உள்ளது. வழிகாட்டுவதற்குப் பதிலாக பாடசாலை ஆசிரியர்களின் பழைய பாணியிலான தண்டனை வழங்குவதாக காணப்படுகிறது.

அமெரிக்க நலன்களின் பாதையில் ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் நலன்கள் தொடர்பாக ஒத்துழைத்து செயற்படுகிறது.

தனது சொந்தத்தவறை புரிந்து கொண்டு தடையை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் அகற்றவேண்டும்.

குறைந்தது ஒரு நூற்றாண்டு காலப்பகுதி வரலாற்று ரீதியான தன்மைகள் , கலாசாரம் என்பவை தொடர்பாகவும் இருதரப்பினரதும் களநிலைவரங்கள் குறித்தும் இராஜதந்திரிகளும் அரசியல்வாதிகளும் அறிந்திருக்க வேண்டும்.

கிழக்குத்திமோரில் இடம்பெற்ற மாற்றங்கள் தொடர்பாக அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அத்துடன் 2003 யுத்த நிறுத்த உடன்படிக்கை அருகியிருந்த காலகட்டத்தில் எல்லைகளுடன் இருந்த இரு அரசுகள் தொடர்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஐ.நா.வின். இராணுவ ரீதியான தலையீட்டுக்கான நிபந்தனை இல்லையா என்பது குறித்து இந்த அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் தங்களைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இனப்படுகொலையைத் தடுப்பதற்கு இது உதவும். மனிதாபிமான இராணுவத் தலையீட்டில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

கிழக்குத்திமோரில் மனிதாபிமான இராணுவத் தலையீட்டினால் பல்லாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன என்று பீற்றர் சோக் தெரிவித்ததாக தமிழ்நெற் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
தாயகத்தில் தமிழர்களை குழிதோண்டி புதைக்க அரசு வைத்திருக்கும் பயங்கரப் பொறியே கிழக்குத் தேர்தல்
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி ஒருபோதும் உறுதியளிக்கவில்லை
வில்பத்துக்குள் இருவர் சுட்டுக்கொலை
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
மு.கா.ஒத்துழைப்புடன் ஐ.தே.க. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும்
சாதாரணதரப் பரீட்சை; வட, கிழக்கு மாணவர்கள் பெரும் சாதனை
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
மடுப் பகுதியை சமாதான வலயமாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் அமைதிப் பேரணி
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
மழையினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும்
டாக்டர் முத்துலிங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா சந்திப்பு
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருடன் ரோகித்த போகொல்லாகம சந்திப்பு
நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
வன்னியில் இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள்
உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்
பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
விசுவமடுப்பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
மல்வத்தயில் பஸ்- வான் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மூவின மக்களும் அச்சுறுத்தப்படும் நிலை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் 120 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மின்னல் தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் மரணம்
தாழ்வுபாட்டை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளைவானில் அழைத்து செல்லப்பட்டார்
ஹெப்பிட்டிக்கொலாவவின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையிலிருந்து பொருட்கள் கடத்திய 5 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்
பிரதி பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் மனு
அநுராதபுர நீரோடையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு
கொடக்கவெல வாகன விபத்தில் ஒருவர் பலி
இடி மின்னல் தாக்கி இருவர் பலி
2 1/2 மாதத்தில் 6 டெங்கு நோயாளர் மரணம் 2096 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
`பொசன்' பண்டிகைக்காக கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் 28 பாடசாலைகள் மூடப்படுகின்றன
இடிமின்னல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி வீதி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
எட்டு மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு
17 பேரையும் அக்ஷன்பாம் நிறுவனம் காப்பாற்றத் தவறியமை முதல்பிழை
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை மீறப்பட்டமையின் விளைவே யுத்தம்
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மாவட்ட தொண்டராசிரியர் நியமனத்தில் குழறுபடியென பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்கள் திருகோணமலையில் மீளக் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com