மியாமியில் நடைபெற்று வரும் சோனி எரிக்சன் ஓப்பன் டெனிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை ஹெனினை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் வீழ்த்தினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹெனினை செரினா 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் முதலில் சில தவறுகள் செய்த போதும் பின்னர் அவற்றை சரி செய்து கொண்டு சிறப்பாக ஆடி செரினா வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து மற்றொரு காலிறுதிப் போட்டியில் மோதும் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா ஆகிய இருவரில் வெற்றி பெறுபவருடன் செரினா அரையிறுதியில் மோதுவார்.
காலிறுதிப் போட்டியில் செரினா சிறப்பாக ஆடினார் என்றும்,பந்துகளை ஆக்ரோஷத்துடன் அடித்து அவர் விளையாடினார் என்றும் கூறியுள்ள ஹெனின், எப்படி ஆட வேண்டுமோ அப்படி செரினா ஆடினார் என்றும், எப்படி ஆட வேண்டுமோ அப்படி தான் ஆடவில்லை என்றும் ஹெனின் தெரிவித்தார்.