அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைக் கப்டனாக மைக்கேல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிக்கி பொண்டிங் தலைமையிலான இந்த அணியில் மைக்கேல் கிளார்க் துணைக் கப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மைக்கேல் ஹசி பெயரும் துணைக்கப்டனுக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் கிளார்க் இந்தப் பதவிக்காகத் தேர்வு செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மைக்கேல் ஹசியின் சகோதரர் டேவிட் ஹசி ஒரு நாள் போட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சைமன் கட்டிச் அணியில் சேர்க்கப்படவில்லை. ஸ்ருவர்ட் மெக்கில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான அணியில் நதன் பிரேகன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.