ஒரு கடையில் கட்டுப்பாட்டு விலையில் நல்ல அரிசி, தாரளமாக விற்கப்படுவதாக கேள்விப்பட்டு அநேக பாவனையாளர்கள் அங்கு விரைந்தனர்.
ஒவ்வொருவரும் ஐந்து கிலோ, பத்து கிலோ என தமக்குத் தேவையான அரிசியை கட்டுப்பாட்டு விலையில் வாங்கிக் கொண்டு மனத் திருப்தியுடன் சென்றனர்.
இவர்களில் சிலர் சந்தேக மிகுதியால் அரிசியை நிறுத்துப் பார்த்த போது அநேக கிராம்கள் குறைவாக இருந்ததைக் கண்டனர்.
அரிசியை கொள்வனவு செய்யும் போது அவர்களின் முகத்தில் நிலவிய நிறைவு இப்போது வாட்டமாக மாறி விட்டது.
ஆகவே, இப்போது அரிசி வாங்கும் போது அதன் தரத்தையும் விலையையும் மட்டும் பார்க்காமல் நிறையையும் அவதானிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் ஒரு பாவனையாளர்.
இது உங்களின் கவனத்துக்கு!