Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
[30 - April - 2008] [Font Size - A - A - A]
*ஹசன் அலி தெரிவிப்பு

கடும்போக்காளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மகிந்த அரசு சர்வகட்சி மாநாட்டின் இறுதித் தீர்வு கிடைப்பதற்கு முன் இந்தியாவின் அழுத்தத்திற்கும் உந்துதலுக்கும் அடிபணிந்து தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத தேர்தல் ஒன்றை நடத்த முன்வந்துள்ளமை தனக்குத்தானே வெட்டிக் கொண்ட புதைகுழியென்பதில் சந்தேகமில்லை என ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முதன்மை வேட்பாளருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கல்முனையில் மாகாண சபை வேட்பாளர் அப்துல்ரஸ்ஸாக் ஜவாதை ஆதரித்து நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எல்.சாஹுல் ஹமீத் (பள்ளிக்காக்கா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம்களின் அடையாளமாக கொடியில் எந்தவிதமான சின்னமும் கிடையாது. இம்மாகாணத்தின் இரண்டு மாவட்டங்கள் அம்பாறை மற்றும் திருகோணமலை முஸ்லிம்களின் விகிதாசாரமே அதிகமாகக் காணப்படுகின்ற போதும் அதனை மறைத்து மகிந்த அரசு சிங்கள மேலாதிக்கத்திற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றது.

எமது மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப்பின் கனவான முஸ்லிம் தனி அலகு என்ற கோட்பாடு இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றாலேயே நிஜமாகும். இதற்கு மாற்றமாக அவரது மனைவியும் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோட்பாடு தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் மறுத்துப் பேசியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் மூலம் முகவரி தேடிக் கொண்ட இவர்கள் இன்று முஸ்லிம் சமூகத்தை மறந்து துரோகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுகின்ற இத்தேர்தலில் தனது படைப்பலத்தைப் பயன்படுத்தி இத்தேர்தலில் எவ்வாறாயினும் வெற்றி பெற வேண்டும் என நினைத்து பலகோடி ரூபா செலவு செய்யப்படுகின்றன.

நமது சமூகம் பணத்திற்கு ஏமாறும் சமூகம் அல்ல என்பதை இத்தேர்தலில் மகிந்த அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இன்னும் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் நான் பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் தான் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கும் அதைக்கூட பொருட்படுத்தாமல் பாராளுமன்றப் பதவியெல்லாம் சமூகம் என்று வருகின்ற பொழுது காலுக்குக் கீழேதான் என்ற செய்தியை முஸ்லிம் சமூக விரோதிகளுக்கும் மகிந்தவின் கூஜா தூக்கிகளுக்கும் சொல்லிக் காண்பித்திருக்கின்றோம். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் 82 வீதமானவை முஸ்லிம் காங்கிரஸுக்கே அளிக்கப்பட்டது.

எத்தனை அமைச்சர்கள் இங்கு வந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் 10 ஆம் திகதி முஸ்லிம் சமூகத்தின் இருப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com