Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
[30 - April - 2008] [Font Size - A - A - A]
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் எதிர்வரும் மேதினத்தினை முன்னிட்டு நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தத்தமது மேதினப் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினப் பொதுக்கூட்டமும் பேரணியும் அட்டன் நகரில் இடம்பெறவுள்ளது. இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொள்ளவுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மேதினப் பொதுக்கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தலைமையில் பண்டாரவளை நகரில் இடம்பெறவுள்ளது. தொழிலாளர் விடுதலை முன்னணி ஆசிரியர், விடுதலை முன்னணி என்பனவற்றில் மேதினப் பொதுக் கூட்டமும் பேரணியும் நானுஓயா நகரில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு டி.அய்யாத்துரை, மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் எஸ்.அருள்சாமி ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினக் கூட்டமும் அதன் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது.

மேலக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்பனவற்றின் மேதினப் பொதுக் கூட்டம் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தலைமையில் பொகவந்தலாவை நகரில் இடம்பெறவுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினப் பொதுக்கூட்டம் அதன் தலைவரும் பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் பதுளை நகரில் இடம்பெறவுள்ளது.

லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினப் பொதுக் கூட்டம் மாத்தளை நகரசபை மண்டபத்திலும் இலங்கைத் தேசிய தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் நாவலப்பிட்டி கிம்புல்பிட்டிய தோட்டத்திலும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மேதின நிகழ்வு தோட்ட வாரியாகவும் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட மேதின பிரார்த்தனை நிகழ்வொன்று அட்டன் ஷ்ரீ சிவசுப்பிரமணியம் தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ளது.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com