Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
[30 - April - 2008] [Font Size - A - A - A]
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலிருந்து ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் தமது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு சார்பாக மு.க.அபுயூசூவ் என்பவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இன்று நாடெங்கிலும் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் காரியாலயங்களுக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பெயரால் இயங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் என்ற ரெலோ உறுப்பினர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லையென ரெலோவின் ஆரம்ப கால உறுப்பினர்களும், மத்திய குழு உறுப்பினர் களும் தற்போது ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் தலைமைக் குழுவினதோ, மத்திய குழுவினதோ, பொதுக் குழுவினதோ அங்கீகாரமின்றி, ரெலோவின் அங்கத்தவர்கள் சிலர் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைமையில் போட்டியிட்டதுடன் மட்டுமல்லாது, புலிகளை தமிழ் பேசும் மக்களின் ஏகப் பிரதி நிதிகளாகவும் ஏற்றுக் கொண்டதனையும் வெற்றி பெற்ற பாராளுமன்ற அங்கத்தவர்கள் ரெலோ ஸ்தாபனத்தையும் அதன் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் அதன் நன்மதிப்பையும் சீரழிக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கிய காரணத்தையும் ஆராய்ந்த இந்தக் குழுவினர், இந்தச் சீரழிவுகள் அனைத்திற்கும் இந்த மக்கள் பிரதிநிதிகள் என இயங்கியவர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் எனக் கருதி, அந்த பாராளுமன்ற பிரதிநிதிகளையும் இவ்வளவு சீரழிவுகளுக்கும் அவர்களுக்குத் துணை நின்ற கட்சி உறுப்பினர்களையும் ரெலோவிலிருந்து உடனடியாக நீக்குவதென்று இக்குழு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் அபிலாசையான ஐக்கியப்பட்ட, சமதர்ம இலங்கைக்குள், இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்களை பிரிக்கவும் பறிக்க முடியாத தேசிய ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக உறுதியாகவும் உண்மையாகவும் இயங்கு முகமாக தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு காரியாலயங்களை முழு வேகத்துடன் இயக்குவதற்கும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் காரியாலயங்களை புனர் நிர்மாணம் செய்து புத்துயுரளித்து முழு வேகத்துடன் இயக்குவதற்கும் இந்தக் குழு ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றது.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com