கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இளைஞர்கள் இருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக முகத்துவாரப் பொலிஸார் தெரிவித்தனர்.
மக்கள் கண்காணிப்புக் குழுவின் புள்ளிவிபரங்களின் படி, இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரையான 16 வார காலப்பகுதியில், கொழும்பையும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் 18 பேர் கடத்தப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
கொழும்பு - 15 அளுத்மாவத்தை வில்பிரட் ஒழுங்கையைச் சேர்ந்த 23 வயதான செல்வச்சந்திரன் நிஷாந்தன் எனும் இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக முகத்துவாரப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, முகத்துவாரப் பகுதியில் சாரதியொருவர் தனது வானை நிறுத்திவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் வானொன்றில் வந்தசிலர் அவரைக் கடத்திச் சென்றுள்ளதாக அவரது தாயார் முகத்துவாரப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கருணாகரன் என்ற 29 வயது இளைஞரே கடத்தப்பட்டவர் எனவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.