Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
[30 - April - 2008] [Font Size - A - A - A]
நெடுந்தீவு கடற்றொழிலாளர்களின் ஜீவனோபாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக சிறுவர் பாதுகாப்பு நிதியம் அறுபத்திமூன்று இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டி வசதி கொண்ட நாற்பதடி நீளமான மீன்பிடி வள்ளமொன்றை இன்று புதன்கிழமை காலை நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கத்திடம் கையளிக்கவுள்ளது.

இந்த மீன்பிடிப் படகை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், குறிகட்டுவான் இறங்கு துறையில் இடம்பெறும் வைபவமொன்றில் நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளிடம் கையளிப்பார்.

கொழும்பு `டொக்கியாட்' நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த மீன்பிடிப் படகு கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு இன்று கையளிக்கப்படுகின்றது.

இப்படகின் மூலம் நெடுந்தீவில் பிடிக்கப்படும் கடலுணவுப் பொருட்களை நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணம் சந்தைக்கு எடுத்துவந்து சந்தைப்படுத்த வசதி கிட்டியுள்ளது.

சிறுவர் நிதியத்தால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தால் நெடுந்தீவில் வாழும் ஆயிரத்தி ஐந்நூறு கடற்றொழில் குடும்பங்களின் ஜீவனோபாயம் மேன்மையடையவும் அவர்களுடைய சிறார்கள் ஐந்நூறு பேர்வரை நன்மையடைவார்கள் எனவும் சிறுவர் நிதிய யாழ்.மாவட்ட முகாமையாளர் விக்ரர் மொஸ்சஸ் தெரிவித்தார்.

இத்திட்டத்துக்கான நிதியை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் சிபார்சுக்கமைய கடந்த வருடமே ஒதுக்கப்பட்டபோதும் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடிப்படகை எடுத்துவருவதில் நிலவிய தாமத்தால் இவ்வருடமே வழங்கப்படுகின்றது.

இப்படகில் மூன்று மெற்றிக்தொன் கடலுணவுப் பொருட்களை குளிரூட்டும் களஞ்சிய வசதியுண்டு.

மீன்பிடிப் படகின் செயற்பாடுகள் வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியின் கட்டுப்பாடுகளுக்கு அமைய கடல் பயண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க அதிபரும் சில கட்டுப்பாடுகளை நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு விதித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com