நெடுந்தீவுக் கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொன்டிருந்தபோது கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஆறு பேரும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் மே மாதம் 12 ஆம் திகதி வரை யாழ்.சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா உத்தரவிட்டார்.
அதேநேரம், இவர்கள் தொடர்பாக சட்டமாஅதிபரின் ஆலோசனையை பெறுமாறும் அதுவரை ஆறு மீனவர்களையும் தடுப்புக்காவலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த ஆறு மீனவர்களும் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.