கொக்குவில் ரயில் நிலைய வீதிக்கு சமீபமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6.45 மணியளவில் ரயில் நிலைய வீதிக்குச் சமீபமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுத பாணிகளே இவரை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கொல்லப்பட்டவர் யாரென்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.