Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
[30 - April - 2008] [Font Size - A - A - A]
* ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத் கூறுகிறார்

எம்.ஏ.எம். நிலாம்

அணு பரிசோதனையை காட்டி தம்மை அடக்குவதற்கு மேற்குலகம் முயற்சித்ததாகவும் ஈரான் மக்கள் ஒன்றுபட்டு செயற்பட்டதால் அதிலிருந்து தங்களால் மீட்சிபெற முடிந்ததாகவும் தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத் இலங்கை உட்பட உலக நாடுகள் இதனைப் பாடமாகக் கொள்வதன் மூலம் மேற்குலக ஆதிக்கச் சக்திகளிடமிருந்து மீட்சிபெற முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.

அநீதியும் சண்டாளர்களும் உலகிலிருந்து தூக்கி எறியப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மானுட நேயத்தின் அடிப்படையில் நாம் ஒன்றுபட்டால் புதிய உலகத்தை மலரச் செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி அஹமத் நிஜாத் நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் அனைத்து மதத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமைதாங்கினார். மௌலானாவின் வரவேற்புரையையடுத்து ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார்.

உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பெரும் சவால்கள் பற்றியும் அவற்றை வெற்றிகொள்வதற்கான வழிவகை குறித்தும் ஈரான் ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

"ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாகொமைனியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாம் உன்னதமான ஈரானை இன்று கட்டியெழுப்பியிருக்கின்றோம். சமீபகாலம் வரை மேற்குலகின் அநீதியும் சண்டாளர்களின் கயமைத்தனங்கள் தலைவிரித்தாடிய போதிலும் இன்று பொய் தோல்வி கண்டு சத்தியம் வெல்லக்கூடிய காலம் தொடங்கியுள்ளது. அநீதியும் சண்டாளர்களும் இல்லாமல் போக ஆரம்பித்துள்ளது.

மனித சமூகத்துக்கு எதிரான சக்திகளின் முயற்சிகள் சின்னாபின்னப்படத் தொடங்கியுள்ளன. இன்றுள்ள கேள்வி நாம் எவ்வாறு ஒற்றுமைப்பட்டு வாழ்வது என்பது தான். எமக்கிடையே அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பன உறுதியாக இருக்கும் வரை எந்தச் சக்தியாலும் எம்மை அழிந்துவிட முடியாது. ஆயுதங்களுக்கு காணப்படும் சக்தியை விட பலமான சக்தி இந்த அன்பு, கருணை, சகிப்புத்தன்மைக்குக் காணப்படுகின்றது.

போர் மனநிலையில் தவறான வழியில் ஆயுதங்களைப் பாவித்து மனித கௌரவத்தை தரக்குறைவாக்கும் திட்டங்களை மேற்குலகம் மேற்கொள்கின்றது. இந்தப் பேராபத்திலிருந்து நாம் விமோசனமடைய வேண்டுமானால் அது எமது ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. எமக்கிடையே குழப்பங்களை உருவாக்கி மனித சமுதாயத்தை சின்னாபின்னப்படுத்துவதில் திட்டமிட்டுச் செயற்படும் மேற்குலகம் மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் மோதலை உருவாக்கும் மறைமுக பணியை மேற்கொண்டு வருகிறது.

அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களை சந்திக்கும் அரியதொரு வாய்ப்பு இந்த நாட்டில் எனக்குக் கிடைத்தது. இதனை நான் பெரும் பேறாகவே கருதுகின்றேன். இங்கு நான் மிக முக்கிய விடயங்கள் சிலவற்றை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

இறைவனின் கருணையும் மனிதனின் பிறப்பும் முக்கியமானதாகும். மனித சமூகம் இறைவனின் கருணையை சரியாக புரிந்துகொண்டால் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், பிரச்சினைகள், அழிவுகள் இடம்பெற்றிருக்க முடியாது.

இருளிலிருந்து ஒளியை நோக்கிய பாதையில் கால்பதித்து அநியாயத்தை வீழ்த்தி நியாயத்தை வெற்றிகொள்ளச் செய்வதில் மதத் தலைவர்களுக்கு பெரும் பங்குண்டு.

ஆயுதங்களுக்குப் பதிலாக கருணை, அன்பு, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவற்றை நாம் கைகளில் எடுக்க வேண்டும். அதனூடாக இந்த உலகத்தையே எம்மால் வெற்றிகொள்ள முடியும். நாம் யாரையும் ஆதிக்கம் செய்ய முற்படவில்லை. எமது மக்களை தலைநிமிர்ந்து வாழ வைப்பதற்கே எம்மிடமிருக்கும் பலத்தைப் பயன்படுத்துகின்றோம். எமது நம்பிக்கை உறுதியாக இருக்கும் வரை எம்மை பலவீனப் படுத்த எந்தச் சக்தியாலும் முடியாது.

மனித சமுதாயத்தின் மீட்சிக்காக பாடுபடும் அனைவருக்கும் ஈரான் என்றும் பக்கத்துணையாக இருக்கும். உதவிக்கரங்களை நீட்டும்" எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com