Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
[30 - April - 2008] [Font Size - A - A - A]
* பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறு கோரிக்கை

மே 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியை சுகாதார அமைச்சு தேசிய நச்சுத் தடுப்பு வாரமாக (NATIONAL POISON PREVENTION WEEK) பிரகடனப்படுத்தியுள்ளது.

சுகாதார கல்விப் பணியகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விடயங்களைத் தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ மேலும் தெரிவித்ததாவது;

இலங்கையில் நச்சுப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளைத் தோற்றுவிக்கும். எமது வாழ்வுக்கும் பாதகமாக அமையும். இதனை கவனத்திற் கொண்டு சுகாதார அமைச்சு தேசிய நச்சுத்தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இப்பிரகடனம் வெற்றியளிப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பு பிரதானமானது. பொதுமக்களுக்கு இது தொடர்பாக ஊடகங்கள் அறிவூட்டுவது அவசியமாகும்.

இலங்கையில் தற்கொலை செய்வோரில் பெண்களே முன்னணி வகிக்கின்றனர். அலரி விதையை உட்கொண்டே அதிகம்பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 20 வயதிற்கும் 29 வயதிற்குட்பட்டவர்களே தற்கொலையில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

அதேவேளை, இலங்கையில் நச்சுப் பாம்புகள் கடித்தும் பலர் உயிரிழக்கின்றனர். 1993 இல் பாம்புக் கடிக்கு 2 இலட்சத்து 66 ஆயிரம் பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 2005 ஆம் ஆண்டு 36 ஆயிரத்து 861 பேர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 134 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் 2005 ஆம் ஆண்டு நஞ்சருந்திய நிலையில் 91 ஆயிரத்து 52 பேர் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஆயிரத்து 785 பேர் மரணித்துள்ளனர்.

பாதிப்புக்குள்ளாகியவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவதிலுள்ள தாமதமே அவரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைகிறது. போதிய விழிப்புணர்வின்மையும் இதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, நச்சுப் பாவனை மற்றும் விஷஜந்துக்கள் குறித்து போதிய விழிப்புணர்வுடன் செயற்படுவது மிகப்பிரதானமானதாகும்.

இதன்பொருட்டே சுகாதார அமைச்சு மே 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தை தேசிய நஞ்சு தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் கருப்பொருள் `கிருமிநாசினி தாக்கத்திலிருந்து இலங்கையைப் பாதுகாப்பது என்பதாகும்' என்றார்.

இங்கு மனோதத்துவ ஆலோசகரும் வைத்தியருமான நீல் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்;

தற்கொலைக்கு முயன்று தோல்வி கண்டவர்கள் குறித்து ஊடகங்கள் வெளியிடும் தகவல்களினால் அவர்கள் மேலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தற்கொலையைத் தூண்டும் செயற்பாடுகளில் எவ்வகையிலும் ஊடகங்கள் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, சமூகத்தாக்கங்களில் ஒன்றான தற்கொலையைத் தடுக்க ஊடகப் பங்களிப்பு அவசியமென்றார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com