Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
[30 - April - 2008] [Font Size - A - A - A]
வவுனியாவில் கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் வைத்து இராணுவ சீருடையணிந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்த செல்வராசா மணிவண்ணன் என்ற (17 வயது) மாணவன் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

வவுனியா கண்டி வீதியில் உள்ள தமிழ் மகா வித்தியாலயம் அருகில் வைத்து இம்மாணவன் மூடிய வாகனத்தில் கொண்டுவரப்பட்டு விடுவிக்கப்பட்டார் எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கண்டி- திரித்துவக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் இம்மாணவன் விடுமுறையில் சூசைப்பிள்ளையார் குளத்தில் உள்ள வீட்டில் பெற்றோருடன் தங்கியிருந்தபோது பவள் வாகனத்தில் வந்த இராணுவ சீருடையணிந்தவர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறையிட்டிருந்தனர்.

இது தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து திங்கட்கிழமை விசாரணை நடைபெற்றது.

பவள் வாகனத்தில் வந்தவர்களால் இம்மாணவன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வவுனியாவில் பவள் வாகனம் உள்ள 211 ஆவது படைப்பிரிவான இராணுவ தலைமையகம், தாண்டிக்குளம் முகாம், நகரப்பகுதி முகாம் என்பவற்றின் அதிகாரிகள் நீதிமன்றம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரியும் இது தொடர்பாக 211 ஆவது படைப்பிரிவில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே நேற்று இந்த மாணவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com