Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
[30 - April - 2008] [Font Size - A - A - A]
* வேகமாக சென்ற வாகனம் மரத்தில் மோதியது

அம்பாறை அரலகங்வில பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்த அதேநேரம், களனி பிரதேச சபைத் தலைவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர்களுடன் சென்ற மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை 4.45 மணியளவில் அரலகங்வில தெகியத்த கண்டிய கஜுவத்தை சந்தகலதன்னவில் 9ஆம் மைல் கல் பகுதியிலேயே இந்த வீதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் மேர்வின் சில்வா தனது சகாக்களுடன் தனது வாகனத்தில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த போதே, வீதி வளைவொன்றில் வாகனம் வேகமாகத் திரும்பிய போது வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்று மரமொன்றுடன் மோதியுள்ளது.

இதனால், அமைச்சரின் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் அதனுள்ளிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்தார்.

அவருடன் சென்ற களனி பிரதேச சபைத்தலைவர் சீவலி கலனி திலக என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததுடன் பாதாள உலகக் குழுத்தலைவரான கடவத்த அமல் என்பவரும் மற்றொருவரும் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் கை முறிந்த நிலையிலும் காலில் படுகாயமடைந்த நிலையிலுமிருந்த அமைச்சர் மேர்வின் சில்வா விமானப் படை ஹெலிகொப்டர் மூலம் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்.

இதேநேரம், படுகாயமடைந்த கடவத்த அமலும் மற்றவரும் உடனடியாக தெகியத்தகண்டிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் கடவத்த அமலின் நிலைமை மோசமாயிருந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் உயிரிழந்த களனி பிரதேச சபைத் தலைவரது சடலம் தெகியத்தகண்டிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com