Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
[30 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம். நிலாம்

தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜே.வி.பி. தலைமைத்துவத்துக்கு இன்று புதன்கிழமை நள்ளிரவு வரை காலக்கெடு விதித்திருக்கும் அதிருப்திக்குழு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தவறினால் நாளை மே தினத்தன்று புதிய அரசியல் அணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமானால் கட்சியிலிருந்து பெருமளவான ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்திய விஷேட செயதியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தனது முடிவை அறிவித்துள்ளார்.

ஜே.வி.பி.க்குள் தற்போது கட்சியை வளர்த்தெடுத்தவர்கள் மீது பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குத் துரோகமிழைப்பவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். கட்சியை பாதுகாத்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு வெளியேற்றும் சதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிக்குள் நடக்கும் அதிகாரங்கள் செயற்பாடுகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.

நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்துள்ளோம். (இன்று) 30 ஆம் திகதி புதன்கிழமை வரை கட்சி மத்திய குழுவுக்கு கால அவகாசம் வழங்கியிருக்கின்றோம். சரியான பதில் கிட்டாது போனால் நாளை மே தினத்தன்று எமது புதிய அரசியல் பயணத்துக்கான அத்திபாரமிடப்படும்.

எனக்காக குரல் எழுப்பியதால் கட்சியில் விளக்கம் கோரப் பட்டிருக்கும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் என்னோடு இணைந்து செயற்பட முன் வந்துள்ளனர். அதோடு ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் அதிருப்தி கொண்டிருக்கும் பலரும் எம்மோடு ஒன்றிணைய வருகின்றனர் எனவும் விமல் வீரவன்ச செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com