Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
[30 - April - 2008] [Font Size - A - A - A]
* காலநிலை சீர்கேடால் வெள்ளவாயா பயணம் ரத்து

எம்.ஏ.எம்.நிலாம்

இலங்கையிலுள்ள ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 1.2 பில்லியன் டொலர் செலவில் அபி விருத்தி செய்யும் திட்டத்தை ஈரான் ஜனாதிபதி மஹ்முத் அகமதிநிஜாத் நேற்று செவ்வாய்க்கிழமை வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி திட்டத்துக்கு பெருந்தொகை நிதியை ஈரானே வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஈரான் ஜனாதிபதி அகமதி நிகாத்தும் கருங்காலி மரக்கன்றை நாட்டி அபி விருத்தித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தனர்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளாந்தம் 50 ஆயிரம் பரல் எண்ணெய்யே சுத்திகரிக்கபடுகிறது. ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 4 ஆண்டுகாலத்திட்டத்தின் பிரகாரம் தினமும் 1 இலட்சத்து 50 ஆயிரம் பரல் எண்ணெயை சுத்திகரிக்கமுடியும்.

இலங்கையின் எண்ணெய் தேவையில் 70 சதவீதமானவற்றை ஈரானே பூர்த்திசெய்கின்றது. இதனை மேம்படுத்த 700 மில்லியன் டொலர் உதவிவழங்குவதற்கு ஈரான் இணங்கியுள்ளதாக இந்த வைபவத்தில் கலந்துகொண்ட பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இதன்மூலம் விமானசேவைக்கான எரிபொருள் மற்றும் தார் ஆகியவற்றின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் பௌசி கூறினார்.

இது இவ்வாறிருக்க காலநிலை சீரின்மையால் உமாஓயாத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் ஈரான் ஜனாதிபதியால் நேற்று பங்கேற்கமுடியவில்லை. வெள்ளவாயாவில் உமாஓயா நீர்ப்பாசன திட்டம் 450 மில்லியன் டொலர் செலவில் நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இத்திட்டதை ஈரான் ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவிருந்த போதும் அவருக்கு பதிலாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகளுடன் 15 பேரடங்கிய ஈரான் தூதுக்குழுவும் கலந்துகொண்டது.

உமா ஓயாத்திட்டம் நான்கு வருடங்களில் பூர்த்தியடைந்ததுடன் மேலும் 100 மெகாவாட் நீர்மின்சாரத்தை இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தானிலிருந்து நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய ஜனாதிபதி பத்திரிகையாளரை சந்திக்கவில்லை. ஆனாலும் அரசியல், கலாசார, பொருளாதார ரீதியிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கு அகமதி நிஜாத் ஆர்வம் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் தெரிவித்தது.

அகமதி நிஜாத்தின் விஜயம் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான விடயமென வர்ணிக்கப்படுகிறது. இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயமென ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

தமது விஜயத்தை நிறைவு செய்துகொண்டு அகமதி நிஜாத் இந்தியாவுக்கு பயணமானார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com