Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தின் போது....
கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சமயத் தலைவர்களுடனான சந்திப்பின்போது மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஈரானிய ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு வழங்குவதையும் அஹமதி நிஜாத் கொழும்பு கப்பித்தாவத்தை பாலசெல்வவிநாயகர் ஆலய பிரதமகுரு பிரம்மஷ்ரீ சண்முகரத்தின சர்மாவுடன் உரையாடுவதையும் மௌலவி நியாஸ் முஹமத் உட்பட பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர்களையும் கலந்து கொண்ட மத அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினரையும் காண்கிறீர்கள்.
அண்மையில் நோர்வே ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற தென் ஆசிய கண்டத்தின் `சமாதானமும் ஒருமைப்பாடும்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உதவிச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக திருகோணமலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தரைவழியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் அங்கிருந்து கிண்ணியாவிற்கு செல்வதற்காக பாதை மூலம் பயணம் செய்வதையும் மூதூர் இறங்குதுறையில் அவர்கள் பாதையிலிருந்து வரவேற்கப்படுவதையும் இங்கு காணலாம்.
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com