Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
நேபாளத்தில் 21 கட்சிகளை சேர்ந்த 293 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
[04 - April - 2008] [Font Size - A - A - A]
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமையினால் 21 கட்சிகளைச் சேர்ந்த 293 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நேபாள தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி அரசியல் நிர்ணயசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் சட்டத்தை உருவாக்கும் இந்த தேர்தலில் 21 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

தேர்தல் நாள் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், குடியுரிமைச் சான்றிதழை சமர்பிக்காத 227 பேரின் வேட்பு மனுக்களும் போட்டியிட தகுதியான வயதை பெற்றிருக்கவில்லை என்று 66 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமைக்குள் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களைப் பற்றிய முழுவிவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தங்களது விவரங்கள் குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.

Email this page Your Opinion Print this page
உக்ரைன், ஜோர்ஜியாவை நேட்டோவில் இணைக்கும் திட்டம் தோல்வி
தலாய் லாமா மீதான சீனாவின் குற்றச்சாட்டு தவறானதென அமெரிக்கா அறிவிப்பு
ஐ.நா. மீதான தாக்குதல்களை ஆதரித்துள்ள அல்-ஹைடாவின் பிரதித் தலைவர் ஷவாஹிரி
சுவிஸில் தொடரப்பட்ட சர்தாரிக்கெதிரான வழக்கிலிருந்து பாகிஸ்தான் அரசு வாபஸ்
நேபாளத்தில் 21 கட்சிகளை சேர்ந்த 293 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com